Sunday, October 30, 2011

மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் இந்தியா?

அருணாச்சாலப்பிரதேசத்தில் பாலம் அறுந்து விழுந்ததில் 50 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஷெப்பா என்ற இடத்தில் கெமங் ஆற்றின் மீது இருந்து தொங்கு பாலம் அறுந்து விழுந்தது. பாலம் அறுந்து விழுந்ததில் நடந்து சென்ற அனைவரும் ஆற்றின் நீரில் மூழ்கினர். இருவர் மட்டும் நீந்தி உயிர் தப்பியுள்ளனர்.

சிந்திக்கவும்:
இதுமாதிரி கொடுமைகள் எல்லாம் இந்தியாவில்தான் நடக்கும். பாதுகாப்பில்லாத பாலங்கள், பாதுகாப்பில்லாத படகுபயணம், ரயில்களில் போதிய பாதுகாப்பு இல்லாமை, வாகனங்கள் குறித்த ஒரு தரக்கட்டுபாடு இல்லாமை இப்படி விபத்துகளுக்கு உண்டான காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

இந்திய
அரசு அதிகாரிகள் லஞ்சத்தை வாங்கிகொண்டு தரம் இல்லாத விசயங்களுக்கு அனுமதி கொடுப்பதன் விளைவு, கும்பகோணம் பள்ளி குழந்தைகள் தீ விபத்து முதல் தொடங்கி சுற்றுலா படகுகள் கவிழ்வது வரை அன்றாடம் விபத்துக்கள் மூலம் நடக்கும் கோர மரணங்கள் அதிகரித்து கொண்டே சொல்கிறது.

இந்திய அரசு
"இந்தியாவை முன்னேற்ற போகிறோம்" என்று சொல்லி கூடங்குளம் அனுமிநிலயம் முதல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரை எத்தனயோ பாதுகாப்பில்லாத விடயங்களை கொண்டுவருகிறது. ஒரு சாதாரண உபயோகம் இல்லாத பாலத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதே தெரியாத இவர்கள் எப்படி அனுமிநிலயத்தை பாதுகாக்க போகிறார்களோ.

இதை பார்க்கும் போது
போபால் விசவாய்வு கசிவே நினைவுக்கு வருகிறது. அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நஷ்டஈடு கொடுக்க முடியவில்லை. எங்கோ பலம் விழுந்தது ஐம்பது பேர் செத்தார்கள் என்று மவுனம் காக்காமல் இதற்காக மொத்த நாடும் கொந்தளித்து எழவேண்டும். மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாத எந்த முன்னேற்ற திட்டங்களையும் அரசு கொண்டுவருவதை அனுமதிக்க கூடாது.

எல்லா நலத்திட்டங்களும் மக்களின் அடிப்படை வசதிகளை  பெருக்குவதற்க்காகவே அல்லாமல் மக்களின் பாதுகாப்பை கேள்விகுறி ஆக்குவதற்காக அல்ல.
இதுபோன்ற அநீதிகளுக்கு எதிராக மக்கள் ஒன்று திரளவேண்டும். இதுபோல் சக மக்களுக்கு பதிப்புகள் ஏற்ப்படும் போது மொத்த நாடே கொந்தளிக்க வேண்டும். ஒரு அன்னா கசாரேயின் போராட்டத்திற்கு பணியும் அரசு நாடே கொந்தளிக்கும்போது பணியாதா என்ன? மக்கள் சிந்திப்பார்களா? விழிப்புணர்வு கொள்வார்களா?

No comments:

Post a Comment