Monday, October 3, 2011

குடுமி பிடி சண்டையில் பி ஜே பி குடுமி அறுபட்ட மோடி !?

அடுத்த பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை சொல்லி பிஜேபி-க்குள் உட்கட்சி பூசல் பூதாகரமாக கிளம்பியுள்ளது.

வெள்ளிக் கிழமை டெல்லியில் நடந்த தேசிய நிர்வாக சமிதி கூட்டத்தை மோடியும், எடியூரப்பாவும் புறக்கணித்தனர். வெள்ளியன்று நடந்த தேசிய நிர்வாக சமிதி கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக அத்வானியை அறிவிக்க பிஜேபி-யில் உள்ள சில தலைவர்கள் முடிவு செய்து வைத்திருந்தனர்.


இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து மோடியும், ஊழல் வழக்கில் சிக்கிய தன்னை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடியூரப்பாவும் அதில் கலந்து கொள்ளவில்லை. குஜராத்தில் முஸ்லீம்களை கொன்றொழித்தும், முஸ்லிம் பெண்களை கற்பழித்தும், குழந்தைகளை பெட்ரோல் குடிக்க வைத்து எரித்து கொலை செய்தும் நடந்த கொடூரமான கலவரங்களுக்கு தலைமை வகித்த மோடி ஆர்.எஸ்.எஸ்-ன் ஆசி மற்றும் ஆதரவோடு பிரதமர் போட்டிக்குள் நுழைந்தார்.

 அதற்க்கு முன்னோடியாக “ஆடு நனைந்தது என்று ஓநாய் அழுத கதையாக” அமைதிக்காகவும் மதநல்லிணக்கத்திற்காகவும் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் அத்வானியோ இவருக்கு “செக்” வைக்கும் விதமாக ஊழலுக்கு எதிரான தனது ரத யாத்திரையை அமைத்தார். இதனால் அத்வானிக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டது.
 ஆர்.எஸ்.எஸ் யை அமைதிபடுத்தும் நோக்கில் “பிரதமர் போட்டிக்கு நான் இல்லை” என்று அத்வானி அறிவித்தாலும், மோடிக்கு எரிச்சலூட்டும் விதமாக பீகாரில் வைத்து ரத யாத்திரையை ஆரம்பித்து, அவரின் எதிரியான நிதீஷ் குமாரை வைத்து துவக்க விழா நடத்துவது என்று தீர்மானித்து தான் வேட்பாளர் களத்தில் உள்ளதை தெரிவித்துவிட்டார். இரண்டு மூத்த தலைவர்களின் குடுமி சண்டை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குள்ளும், பிஜேபி கட்சியினர் இடையேயும் பெரும் கலக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment