Wednesday, October 12, 2011

பொய் குற்றச்சாட்டுகளை பரப்பும் உளவு நிறுவனங்களை கலைக்க வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட்

கொல்லம்: இருபது வருடங்களாக  பாப்புலர் ஃப்ரண்ட்க்கு எதிராக எவ்வித தெளிவான ஆதாரமும் இல்லாமல் தொடர்ச்சியாக அவதூறுகளை  பரப்பி வரும்  அரசு உளவு நிறுவனங்களை  கலைத்து விட வேண்டும் என்று கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொது செயலாளர்  ஜனாப் அப்துல் ஹமீது  “சுதந்திரம் நமது பிறப்புரிமை” என்ற விழிப்புணர்வு  பிரசாரத்தின் நிறைவு விழா  நிகழ்ச்சியின் போது தனது உரையில் கூறினார்.
 
 
கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஆண்டுதோறும் இந்திய சுதந்திரத்தை கொண்டாடும் விதமாக சுதந்திர தின அணிவகுப்பு நடந்து வருகிறது. இவ்வருடம் அதை தடுத்து நிறுத்தும் விதமாக காசர்கோட்டில் நடந்த துப்பாகி சூட்டிற்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கும் தொடர்பு என்ற போலி பிரச்சாரத்தை புலனாய்வு  துறையினர் பரப்பி வந்தனர். பின்னர்  அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று  நிரூபணம் ஆகியது.
 
இப்பொழுது நவம்பர் 26 மற்றும் 27-ல் டெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்த இருக்கும் ‘சமூக நீதி மாநாட்டை’ கண்டு பயந்து, அதை தடுத்து நிறுத்தும் சூழ்ச்சியின் பாகமாக பலவிதமான  கட்டுக் கதைகளை உள்துறை அமைச்சகமும் உளவுத்துறையில் உள்ள சில கறுப்பு ஆடுகளும் சேர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு  எதிராக பலவிதமான பொய் குற்றச்சாட்டுகளை பத்திரிகைகள் வாயிலாக தினம் தினம் பரப்பி வருகிறது.
20 வருடங்களாக சிறுபான்மையினரை சக்திபடுத்தும் விதமாக செயல்பட்டு வரும் பாப்புலர் ஃப்ரண்ட்டுக்கு எதிராக பலவிதமான அவதூறுகளை அள்ளி வீசி பின்னர் எவ்வித ஆதாரங்களும் கிடைக்கமால் கூனி குறுகி நிற்கும் அரசு புலனாய்வு அமைப்புகளை கலைத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எவ்வித விசாரணையை சந்திக்கவும் பாப்புலர் ஃப்ரண்ட் தயாராக உள்ளது என்றும் ஆவேசமாக பேசினார்.
 
குண்டு வெடிப்புகளும் தீவிரவாத தாக்குதல்களும் பிரச்னைகளுக்கு தீர்வு என்று பாப்புலர் ஃப்ரண்ட் கருதவில்லை, அத்தகைய ஈன செயல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எப்போதும் ஆதரித்ததில்லை என்றும் அவர் கூறினார்.
பாசிசத்திற்கும்,ஏகாதிபத்திய சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தில் எவ்வித சமரசமும் இல்லாமல் முன்னேறி செல்வதால்தான் பாப்புலர் ஃப்ரண்ட் நிரந்தரமாக வேட்டையாடப்படுவதாக அவர் பேசினார்.
 
எந்த திசைகளில் இருந்து பிரச்சனைகள் மற்றும் மிரட்டல்கள் வந்தாலும் தன்னுடைய நிலைபாடுகளில் இருந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஒருபோதும் பின்மாறாமல் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சிறுபான்மை மக்களின் முன்னேற்றதிற்காக பாப்புலர் ஃப்ரண்ட் எப்போதும் பாடுபடும், முன்நோக்கி சென்று வெற்றி பெறும் என்றும் அவர் உரையாற்றினார்.

No comments:

Post a Comment