Sunday, October 23, 2011

ரத யாத்திரையும்! ரத்த யாத்திரையும்!

ஊழலுக்கு எதிராக எல்.கே. அத்வானி மேற்கொண்டுவரும் ரத யாத்திரை அக்டோபர் 30 பெங்களூரில் நடைபெறுவதாக இருந்தது . ஆனால் ஊழல் வழக்குகளில் சிக்கி கர்நாடக பாரதிய ஜனதா முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சர்கள் சிறையில் வாடுவதால் அத்வானி ரத யாத்திரையை கர்நாடக மாநிலத்தில் ரத்து செய்கிறார்.

சிந்திக்கவும்:
பாபர் மசூதியை உடைக்க ரத யாத்திரை என்கிற பெயரில் ஒரு ரத்த யாத்திரையை நடத்தினார் மிஸ்டர் அத்வானி. இதன் மூலம் இராமாயண கற்பனை கதாபாத்திரத்தின் நிஜ நடிகர் ஆனார் அத்வானி.

ரதயாத்திரை என்பது என்னவோ இராமாயண கதாபாத்திரம்தான்
ஆனால் அத்வானி அதற்க்கு தனது பாசிச ஹிந்துத்துவா என்கிற விஷ  வெறியை  பூசினார். ஹிந்துத்துவா சித்தாந்தம் மூலம் இந்தியாவை ஆட்சி செய்ய இவர்கள் கண்டேடுத்ததுதான் இந்த ரதயாத்திரை என்கிற ரத்த யாத்திரை.

பாபர் மசூதி இடிப்பிற்கு முன்னர் இந்தியா முழுவதும் அத்வானி நடத்திய ரதயாத்திரை ஆயிரக்கனைக்கில்
சிறுபான்மை முஸ்லிம்களின் உயிர்களையும், ரத்தத்தையும் ஓட்டியது. இந்த யாத்திரை மூலம் இந்தியா முழுவதும் தங்கள் ஹிந்துத்துவா வெறி என்கிற விஷ விதையை இளஞ்சர்கள் உள்ளத்தில் தூவ இந்த யாத்திரை அவர்களுக்கு உதவியாக இருந்தது.

பிற்காலத்தில் இளஞசர்கள் ஹிந்துதுவாவில் நம்பிக்கை இழந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திருக்கு ஆள்பிடிக்கும் நோக்கோடும், சரிந்து போன பாரதிய ஜனதாவை தூக்கி நிறுத்தவுமே இந்த ரதயாத்திரை என்கிற இராமாயண கற்பனை பத்திரத்திற்கு மீண்டும் உயிர் கொடுகிறது ஹிந்துத்துவா. ,இந்த ரதயாத்திரையை பற்றி படிக்கும்போது ம.க.இ.க. தோழர்கள் பாடியிருக்கும் பாடல் வரிதான்  நினைவுக்கு வருகிறது.

இந்த இராமாயண குரங்குகூட மலையதானே பெயர்த்தது

இந்த அத்வானி குரங்கு எல்லாம் மசூதியா இடிக்குது.

நல்ல யோக்கியர்களாக இருந்தால் கர்நாடக மாநிலத்தில் இந்த ஊழலுக்கு எதிரான ரதயாத்திரையை நடத்தவேண்டும்
. அப்படி நடத்தினால் அவர்கள் முகமூடி, வேஷம் கலைந்துவிடுமே.
 

No comments:

Post a Comment