Sunday, October 2, 2011

கர்நாடகா:பஞ்சாயத்து வார்டு தேர்தலில் SDPI வெற்றி


மங்களூர்:கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதி பாவூர் கிராம பஞ்சாயத்து வார்டு தேர்தலில் SDPI வெற்றி பெற்றது. SDPI வேட்பாளர் ஜனாப் நாசிர் 150 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார்.

நாசிருக்கு 536 வாக்குகள் கிடைத்தபோது அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரால்  386 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது.அதே பகுதயில் நடந்த மற்றொரு கிராம பஞ்சாயத்து வார்டு தேர்தலில் SDPI வேட்பாளர் வெறும் 37 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அங்கு SDPI-க்கு இரண்டாவது  இடம் கிடைத்தது.

நாசிரின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த SDPI தொண்டர்கள் மங்களூர் பகுதியில் வெற்றி ஊர்வலம் நடத்தினர். அதில் எராளமான பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியையும் ஆதரவையும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment