Saturday, October 29, 2011

எஸ்.டி.பி.ஐயின் கவுன்சிலர்கள் நேர்மையான அரசியலுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் கோவையில் கடந்த அக்டோபர் 24,25 ஆகிய தேதிகளில் மாநில தலைவர் A.S இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில், பொதுசெயலாளர் A  காலித் முஹம்மது, மாநிலச் செயலாளர் ஷேக் முஹம்மது அன்சாரி, பொருளாளர் கே. எஸ்.எம் இப்ராஹீம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


1 . நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பாப்புலர் ஃபிரண்டின் ஆதரவு பெற்ற தேசிய அரசியல் கட்சியான எஸ்.டி.பி.ஐ யின் வேட்பாளர்களுக்கு சிந்தித்து வாக்களித்து 2 மாநகராட்சி கவுன்சிலர்கள், 2 நகராட்சி கவுன்சிலர்கள், 8 பேரூராட்சி கவுன்சிலர்கள், 50 ஊராட்சி கவுன்சிலர்களை தேர்ந்தெடுத்த தமிழக பெருமக்களுக்கு  பாப்புலர் ஃபிரண்ட் மனமார்ந்த நன்றியை தெரிவிதுக்கொள்கிறது.


பணநாயகத்திற்கும், அராஜக அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க தமிழாக வாக்காளப் பெருமக்கள் தயாராகி விட்டனர் என்பதையே எஸ்.டி.பி.ஐ யின் இந்த வெற்றி பறைசாற்றுகிறது.


கொள்கை பலத்தால் வென்றெடுத்த இந்த பதவிகளை 62 கவுன்சிலர்களும் முறையாக பயன்படுத்தி இனி வரும் 5  ஆண்டுகளுக்கு அயராது மக்கள் பணியாற்ற வேண்டுமென்றும், அரசியல் வியாபாரத்திற்கு சாவுமணியடிக்க நேர்மையான அரசியலுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து சமூக மாற்றத்திற்காக தொண்டாற்ற வேண்டுமென பாப்புலர் ஃபிரண்ட் வேண்டுகோள் விடுக்கின்றது.


2 . திண்டுகளில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்டு எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்யாமல் அவர்களுக்கு துணை நிற்கும் காவல்துறையை பாப்புலர் ஃபிரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. பாதிக்கப்பட்ட எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் மீதே பொய் வசக்கு போட்டு, கைது சித்து, சிறையில் அடைக்கும் காவல்துறையின் சர்வதிகாரபோக்கு நீதியையும், நியாயத்தையும் குழிதோண்டி புதைத்துவிட்டது. இது போன்று அதிகார துஷ்பிரயோகம் செய்யும் திண்டுக்கல் தெற்கு காவல்நிலைய ஆய்வாளர் அய்யாதுரை, நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் அசோகன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமென்றும் பாப்புலர் ஃபிரண்ட் கேட்டுக்கொள்கிறது.


3. பொதுவாகவே கடந்த சில மாதங்களாக பல்வேறு நிகழ்வுகளில் திருநெல்வேலி, வேலூர், சென்னை, வேடசந்தூர், பழனி, மதுரை, பரமக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகமும், சர்வதிகாரப் போக்கும் மிகைத்து வருவது ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் செயலாகும். எனவே தமிழக முதல்வர் உடனடியாக இதில் கவனமெடுத்து நடு நிலையான போக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறையை பணிக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.


4. கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்பு போராட்டக் குழுவிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் தனது முழு ஆதரவையும் தெரிவித்துக்கொள்கின்றது. மக்களின் வாழ்வோடு விளையாடும் இதுபோன்ற பேரழிவுத்திட்டங்களை அரசு உடனடியாக இழுத்து மூடவேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.


5. டி.என்.பி.எஸ்.சி தேர்விலும், அரசுப்பணியாளர் நியமனத்திலும் முறைகேடு செய்து தற்போது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ரத்தினசபாபதி, கடந்த 2006ம் ஆண்டு கோவையில் உளவுத்துறை உதவி ஆணையராக இருந்த போது வெடிகுண்டு புரளியை கிளப்பி 5 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தார். இதனை விசாரித்த சி.பி.சி.ஐ.டி சிறப்புப் புலனாய்வு குழு, இந்த வழக்கு ரத்தினசபாபதி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளால் பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு என கோவை 7வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இறுதி அறிக்கை சமர்பித்தது.


இவ்வாறு கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட ரத்தின சபாபதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கடந்த தி.மு.க ஆட்சியில் அவருக்கு ஏ.டி.எஸ்.பி, எஸ்.பி, தேர்வாணையக்குழு உறுப்பினர் என பல்வேறு பதவி உயர்வு வழங்கப்பட்டன. கிரிமினல் குற்றச்சாட்டிற்கு உள்ளான ரத்தினசபாபதிக்கு சட்டத்திற்கு புறம்பான எந்த அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன என்பதையும் தற்போதுல்ள ஊழல் வழக்கு விசாரணையுன் இணைத்து நடத்துமாறு தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.


மேலும் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையின் அடிப்படையில் ரத்தினசபாபதி மீதும் அவருக்கு துணைபுரிந்த அதிகாரிகள் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.


6. நந்தித் - 1 & 2, மாலேகான் 1 & 2, கான்பூர், அஜ்மீர், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், கோவா, சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ், தென்காசி என நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் வெளிவந்த சங்கப்பரிவார்களின் தொடர்பை மறைக்க, அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப சங்கப்பரிவார பின்புலத்தோடு கடந்த சில மாதன்களால நடந்து கொண்டிருப்பது தான் ஊழல் ஒழிப்பு நாடகம். அந்த நாடகத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவரான திருவாளர் அத்வானி தான் இப்போது ரத யாத்திரை வந்து கொண்டிருக்கிறார்.


இந்த ஊழல் வாதிகளின் கட்சியான பா.ஜ.க மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் (1998-2004), கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் போதும் இவர்கள் செய்த ஊழல்களான நெடுஞ்சாலை ஊழல், பெட்ரோல் பங்க் ஒதுக்கீடு செய்தலில் ஊழல், டெல்லி நில ஊழல், இந்திய வரலாற்று ஆய்வுக்கழக ஊழல், எல்லையில் பாதுகாப்பு வேலி போடுவதில் ஊழல், அரசு நட்சத்திர ஹோட்டல்கள் விற்பனையில் ஊழல், பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியது, கார்கில் போரில் வீரமரணமடைந்த இராணுவ வீரர்களில் பிணங்களை வைக்கப் சவப்பெட்டி வாங்கியதில் ஊழல், நாட்டின் பாதுகாப்பிற்காக இராணுவ தளவாடங்கள் வாங்கியதில் ஊழல், கர்நாடகத்தில் நிலமோசடி ஊழல், சுரங்க ஊழல், ஊழல் ஒழிப்பு யாத்திரையை விளம்பரப்படுத்த மீடியாக்களுக்கு லஞ்சம் என இவர்களின் ஊழல்கள் சந்தி சிரிப்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவர்.


ஊழலில்  ஊறித்திளைத்த சங்கப்பரிவார ஃபாசிஸ‌ கட்சியான பா.ஜ.கவிற்கு ஊழல் ஒழிப்பு யாத்திரை நடத்த என்ன தகுதி இறுக்கிறது? குண்டுவெடிப்பு குற்றச்சாட்டுகளை மறைக்க இவர்கள் நடத்து நாடகம் தான் அத்வானியின் இந்த ரத யாத்திரை. ஊழல் நாயகர்களால ஊழலை ஒழிக்க முடியாது. எனவே ஊழல்வாதிகளின் இந்த ரதயாத்திரையை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment