Friday, October 7, 2011

‘கணவனின் விதியை கடவுள் தீர்மானிக்கட்டும்’: அப்சல் குருவின் மனைவி தபசம் குரு


ஸ்ரீநகர்:2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பாரளுமன்ற தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட அப்சல் குரு, சவுகத் குரு, சவுகத் குருவின் மனைவி அப்ஷான் குரு மற்றும் டெல்லி பல்கலைகழத்தின் ஆசிரியர் அப்துர் ரஹ்மான் கிலானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் உச்சநீதி மன்றம் அப்சல் குருவின் மரண தண்டனையை உறுதி செய்தும், ரஹ்மான் கிலானி மற்றும் அப்ஷான் குருவை விடுதலை செய்தது.
சவுகத் குரு தனது பத்து ஆண்டு காலம் சிறை தண்டனையை முடித்து விட்டு சமீபத்தில் விடுதலையானார். இதனைத் தொடர்ந்து வடக்கு கஷ்மீரில் சோபோர் நர்சிங் ஹோமில் வரவேற்பாளராக பணி புரியும் அப்சல் குருவின் மனைவி தபசம் குரு, தனது கணவனுக்காக கருணை மனுவை சமர்பித்துவிட்டு காத்திருக்கும் அவர், தனது கணவனின் தலை விதியை அல்லாஹ்வின் கைகளில் ஒப்படைத்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின் தபசம் குருவும் அவரது மகன் காலிப்பும் முன்னால் பிரதமர் அப்துல் கலாமை சந்தித்து கருணை மனுவை சமர்பித்தனர். ஆனால் அந்த கருணை மனுவானது இதுவரை அங்கீகரிக்கபடாமல் குடியரசு தலைவரின் முன் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


உச்சநீதி மன்றத்தில் தண்டிக்கபட்ட ஒருவரின் கருணை மனு மாநில சட்டப் பேரவையில் நிலுவையில் உள்ள சம்பவம் ஜம்மு மற்றும் கஷ்மீர் வரலாற்றிலே இதுவே முதல் முறையாகும்.

No comments:

Post a Comment