Thursday, November 17, 2011

ஷார்ஜாவில் 30வது புத்தகக் கண்காட்சி

ஷார்ஜா:ஷார்ஜாவில் 30வது புத்தகக் கண்காட்சி நவம்பர் 16 முதல் 26 வரை நடைபெறுகிறது. அல் தாவூன் மாலுக்கு அருகிலுள்ள ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் வைத்து நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் பல்வேறு பதிப்பகங்கள் தங்கள் ஸ்டால்களைப் போட்டுள்ளன.

தமிழகத்தின் தலைசிறந்த பதிப்பகங்களில் ஒன்றான இலக்கியச் சோலையின் நூல்களும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் இடம் பெறுகின்றன. இலக்கியச் சோலை நூல்கள் கீழ்க்கண்ட ஸ்டாலில் கிடைக்கும்:

தேஜஸ் பப்ளிகேஷன்ஸ்,
இந்தியன்பெவிலியன்
ஹால் எண் : 1, ஸ்டால் எண் : J – 7

இஸ்லாத்தின்அடிப்படையில் நேர நிர்வாகம் குறித்து வெளிவந்துள்ள முதல் தமிழ் நூலான “இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்”, “மனித இனத்திற்கெதிரான குற்றம்”, “கோவை : போலீஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம்”. “மனதோடு மனதாய்”, “வேர்கள்”, “சிறையில்எனது நாட்கள்” முதலான தமிழ் நூல்கள் அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment