Monday, November 7, 2011

அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!

அன்பார்ந்த சகோதர மற்றும் சகோதரிகளுக்கு ,

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ...)

வாழ்க்கையையே போராட்டமாக்கி அனைத்து தியாகங்களையும் மேற்கொண்டு தன்னுடைய வாழ்வை மனித சமூகத்திற்கு முன்மாதிரியாக்கிக் காட்டிய இப்ராஹீம் (அலை)  இந்நாளில் நினைவு கூறும் பொருட்டு தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

பகுத்தறிவுக்கெதிரான நம்பிக்கைகளின் மூலமும் மக்களை அடிமைப்படுத்திய ராஜ்ஜியங்களுக்கெதிரான போராட்டத்தை உலகில் தோற்றுவித்த இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகம்தான் இன்றைய நாளில் நமக்குத் தேவைபடுகிறது. 
 
இப்றாஹீம் (அலை) அவர்களின் அரும் தியாகத்தை நினைவுகூரும் ஈதுல் அழ்ஹா இன்று இந்தியா முழுவதும்  சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
 
இப்ராஹீம் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களாகிய நாம் ஒன்றுபட்டு நிற்போம்; சகோதரத்துவம் பேணி உறுதியுடன் முன்னேறுவோம்!

இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகம் ஓங்கட்டும்!!

 துன்பங்கள் நீங்கட்டும் !!!!        இன்பம் பொங்கட்டும் !!!!!!

 இத்தருணத்தில் கூத்தாநல்லூர் போஸ்ட்  தன் மனமார்ந்த ஈதுல் அழ்ஹா நல்வாழ்த்துகளை தன் வாசக நெஞ்சங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறது.

வாழ்த்துகளுடன் ,
S.B.பைசல் ரஹ்மான்,
புருனை தாருஸ்ஸலாம் .

மற்றும் 
புருனை வாழ் கூத்தாநல்லூர் சகோதரர்கள்.

கூத்தாநல்லூர் போஸ்ட் ஆசிரியர் மற்றும் வாசகர் குழுமம்.

No comments:

Post a Comment