Monday, November 7, 2011

மலேகான் குண்டுவெடிப்பு:ஆர்.எஸ்.எஸ் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்சை பயன்படுத்தியது

மும்பை: 37 பேர் படுகொலைக்கு காரணமான 2006 முதல் மலேகான் குண்டுவெடிப்பை ஆர்.எஸ்.எஸ் தங்களது துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் என்ற அமைப்பை பயன்படுத்தியுள்ளது நிரூபணமாகியுள்ளது. வழக்கை விசாரித்துவரும் என்.ஐ.ஏ இதனை கண்டறிந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் முஸ்லிம்கள் மத்தியில் செயல்படும் இயக்கம்தான் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச். பணமும், இதர வசதிகளும் வாக்குறுதியளிக்கப்பட்டு செயல்படும் இவர்களை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்திவருகிறது என முன்னரே குற்றச்சாட்டு எழுந்தது.

2006 மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்ரார் அஹ்மத் என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் அனுதாபி, தானும் தனது நண்பனும் இணைந்து குண்டுவெடிப்பை நிகழ்த்தியதை ஒப்புக்கொண்டதாக என்.ஐ.ஏ அறிவித்துள்ளது.இவர் இவ்வழக்கில் அப்ரூவர் ஆவார்.

வழக்கில் கைதுச்செய்யப்பட்டுள்ள இதர எட்டு முஸ்லிம் இளைஞர்கள் நிரபராதிகள் என்பது ஏற்கனவே நிரூபணமாகியுள்ளது. அவர்களுக்கு ஜாமீன் வழங்குவதை எதிர்க்கமாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று முன் தினம் அறிவித்திருந்தார்.

குண்டுவெடிப்பை நிகழ்த்த அப்ராருக்கும், அவரது நண்பருக்கும் பெருந்தொகை வழங்கப்பட்டுள்ளது என என்.ஐ.ஏ தெரிவிக்கிறது. அவரது நண்பர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.மத்திய பிரதேசத்தைச்சார்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கான சுனில் ஜோஷி, ராமச்சந்திர கல்சங்கரா, சந்தீப் டாங்கே ஆகியோர் குண்டுவெடிப்பில் முக்கிய சூத்திரதாரிகளாவர்.

மூத்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் மூலமாக சுனில் ஜோஷியை அப்ரார் அறிமுகமானார் என அப்ராரின் மனைவி கூறியதாகவும் என்.ஐ.ஏ கூறுகிறது. குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்கு திட்டம் தீட்ட குஜராத்தில் பரத் ரிதேஷ்வர் என்பவரின் வீட்டிற்கு அப்ரார் சென்றிருந்ததாகவும் அவர் சம்மதித்துள்ளார்.

ஹிந்துத்துவ பயங்கரவாதி அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் வாயிலாக இந்தியாவில் நடந்த பல குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் பங்கு வெட்ட வெளிச்சமானது.

No comments:

Post a Comment