தேரல்கட்டே: பா.ஜ.க தலைவர் அத்வானி பல ரத்த யாத்திரைகளை நடத்தியுள்ளார். தற்போது ஊழலை ஒழிக்க வேண்டும் என்பவராக நாடுமுழுவதும் ரதயாத்திரை நடத்தி வருகிறார். ஊழல் என்பது தேசத்திற்கு மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது தான் என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.
ஆனால் அதே சமயம் நமது நாட்டில் நடைபெறக்கூடிய இனப்படுகொலைகள் ஊழலை விட கொடூரமானது. அத்வானி இதற்கு முன்னர் நடத்திய ரதயாத்திரையின் விளைவாக பல அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்." இவ்வாறு மங்களூர் பல்கழைகழகத்தின் பேராசிரியர் பட்டாபிராமா சோமயாஜி பேசினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சார பொதுக்கூட்டம் கர்நாடக மாநிலம் தேரல்கட்டே நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சோமயாஜி மேற்கூறியவாறு உரை நிகழ்த்தினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து காவல்துறையினரை கடுமையாக விமர்சனம் செய்தார். ஜனநாயக முறையில் இயங்கி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற இயக்கங்களை கண்காணித்து வரும் காவல்துறை தீவிரவாத செயல்களை நாடு முழுவதும் அரங்கேற்றி வரும் ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களை கண்காணிக்காமல் இருப்பது துரதிஷ்டவசமானதாகும்.
உல்லால் நகரில் மாநாட்டிற்கான பிரச்சாரத்தை நடத்த முறையாக அனுமதி கேட்டபோது காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர் ஆனால் இந்தியாவிலேயே முதன் முதலாக தீவிரவாத தாக்குதலை நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ் தான். தேசப்பிதா மஹாத்மா காந்தியை கொன்று அதன் மூலம் தீவிரவாத தாக்குதலை தொடங்கி வைத்தனர் என்று அவர் கூறினார்.
தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் அவர்கள் உரையாற்றும் போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டெல்லியில் மாநாடு நடத்துவது நீதிக்கான போராட்டத்தின் தொடக்கம்தான் என்றார். இந்திய தேசத்தில் சமூக நீதியை நிலை நாட்ட மக்கள அனைவரும் பாப்புலர் ஃப்ரண்டிற்கு கைகொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மண்டல தலைவர் ஏ.எம் அப்துல்லாஹ் நிகழ்ச்சிற்கு ஏற்பாடு செய்திருந்தார். பொதுக்கூட்டம் துவங்குவதற்கு முன்னால் தேரல்கட்டே மஸ்ஜித் முதல் கூட்டம் நடைபெறும் மைதானம் வரை பேரணி நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது ரியாஸ், எஸ்.டி.பி.ஐயின் மாவட்ட தலைவர் ஜலீல், மற்றும் இமாம்ஸ் கவுன்சிலின் தலைவர் ஹஃபீஸ் நிஜாமுதீன் பாகவி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பாப்புலர் ஃப்ரண்டின் மங்களூர் மாவட்ட தலைவர் முஹம்மது ஷரீஃப் வரவேற்புரை நிகழ்த்தினார். சகோதரர் அப்துல் ரவூஃப் நன்றியுரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment