Thursday, November 24, 2011

அமீர் சுல்தானை விடுதலை செய்யக்கோரி நடைபெற்ற கையெழுத்து இயக்கம்

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மண்ணடியில் எஸ்.டி.பி.ஐயினுடைய துறைமுகம் தொகுதி தலைவர் எஸ்.அமீர் சுல்தானை விடுதலை செய்ய வேண்டி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கையெழுத்திட்டு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.




எஸ்.டி.பி.ஐயின் சென்னை துறைமுக தொகுதி தலைவராக செயல்பட்டு வந்தவர் அமீர் சுல்தான். நல்ல துடிப்பும், சுறுசுறுப்புள்ள இளைஞராக திகழ்ந்த அவர் தனது பகுதியில் பல சமூக சேவைகளை செய்துவந்தார். அதன் அடிப்படையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் 60வது வார்டில் போட்டியிட்டு ஆயிரத்து இருநூறு வாக்குகள் மேல் பெற்று அதிமுக, திமுக போன்ற கட்சிகளின் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

அரசியல் காழ்புணர்ச்சி கொண்டவர்கள் காவல்துறையினரின் துணையோடு அவர் மீது பொய்வழக்கு போட்டு கைது செய்தது. இதன் பின்னர் அமீர் சுல்தான் ஈடுபடாத இன்னும் பல வழக்குகளை அவர் மீது திணித்து தற்போது குண்டர் சட்டத்தில் பதிவு செய்துள்ளது.

இதனை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ யின் தலைமை ஜனநாயக ரீதியிலும், சட்ட ரீதியிலும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே சமயம் பொதுமக்களின் ஆதரவை பெற வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மண்ணடியில் அவர் போட்டியிட்ட 60வது வார்டிற்கு உட்பட்ட மஸ்ஜிதுகளில் ஜும்மா தொழுகைக்கு பிறகு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஒவ்வொரு மஸ்ஜிதுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அமீர் சுல்தானின் விடுதலைக்காக தங்களது ஆதரவை கையெழுத்திட்டு தெரிவித்தனர்.

அமீர் சுல்தானின் விடுதலைக்காக சட்ட ரீதியான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வெகுவிரைவிலேயே அவர் விடுதலை அடைவார் என்றும் அதன் பின்னர் அவர்கள் முன்பை விட அதிக சேவைகளில் ஈடுபடுவார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment