Friday, November 25, 2011

டெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

நேற்றைய தினம் 23.11.2011 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிற்கு ஏற்பாடு செய்திருந்தது. பிற்பகல் 12 மணி அளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்டின் உயர்மட்ட குழு தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
 
26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ராம்லீலா மைதானத்தில் நடக்க இருக்கும் சமூக நீதி மாநாடு வெற்றி பெறுவதற்காக உங்களது ஒத்துழைப்பையும், ஆதரவை எதிர்பார்க்கிறோம். அனைவரும் ஒன்றினைந்து தேசத்தை நீதியால் கட்டமைப்போம் என்று  கேட்டுக்கொள்கிறேன்.

ஊடக தொடர்பாளர்
அனீஸ் அஹமது


பத்திரிக்கையாளர்களுக்கு தேசிய தலைவர் அளித்த பேட்டியின் விபரம் வருமாறு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடைபெற விருக்கும் "சமூக நீதி மாநாடு" புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் 26 மற்றும் 27 ஆகிய தினங்களில் நடைபெறும். மாநாட்டிற்கான பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில், இந்தியாவில் இருந்து ஒவ்வொரு பகுதிகளிலிருந்தும் மக்கள் புறப்பட்டு டெல்லியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். மாநாட்டின் இறுதி நாளான 27ஆம் தேதி அன்று நடக்க விருக்கும் பொதுக்கூட்டத்திற்கும் மிகப்பெரிய அளவில் மக்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

மக்களின் உரிமைக்காகவும், நீதிக்காகவும், ஒற்றுமையுடன் பல்வேறு சமூக தலைவர்கள், அறிவுஜீவிகள், சமூக ஆர்வளர்கள் கலந்து கொள்ளக்கூடிய வகையில் இம்மாநாடு அமையும். நமது முன்னோர்கள் கனவு கண்ட "சமூக நீதி" என்பது எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும், அதற்காக மக்கள் தயாராக வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இம்மாநாட்டின் லட்சியமாகும். இன்றைய காலகட்டத்தில் நமது தேசம் பல ஆபத்துக்களை எதிர்கொண்டு வருகிறது. அவற்றில் ஊழல், மதவாத சக்திகள், காலணியாதிக்கம், தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், விவசாயிகளின் தற்கொலைகள் மற்றும் மனித உரிமைய் மீறல்கள் போன்றவை மிக ஆபத்தானதாகும். இத்தகைய நிலையில் மக்களை ஒன்று திரட்டி சமூக நீதிக்காக போராட வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது. 26ஆம் தேதி காலை 9:30 மணி அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் பாப்புலர் ஃப்ரண்டின் மூவர்ணக்கொடியை ஏற்றி மாநாட்டினை துவக்கி வைப்பார். முதல் நாளன்று இரண்டு கருத்தரங்கங்கள் நடைபெறும். இரண்டாம் நாளான 27ஆம் தேதி அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும்.

இரண்டாம் நாள் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் ராம்லீலா மைதானத்தில் சரியாக 1 மணிக்கு தொடங்கி 4:30 மணி அளவில் நிறைவுபெரும். பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கி நடத்தித்தருவார். அதன் பின்னர் இந்தியாவின் பிரபலங்களான முலாயம் சிங் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான், ஆஸ்கர் பெர்னான்டஸ், அஜீஸ் புர்னே, செய்யது ஷஹாபுதீன், மெளலானா முஹம்மது அஷருல் ஹக் காஸிமி, மெளலானா முஹம்மது வலி ரஹ்மானி, மஹான் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் மஹராஜ், ஈ.அபூபக்கர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கின்றனர்.

மாநாட்டின் முதல் நாளான 26ஆம் தேதி "வலிமையை நோக்கி" என்ற தலைப்பில் காலை 10.00 மணி அளவில் நடக்கவிருக்கும் மாபெரும் கருத்தரங்கத்தை ஃபதஹ்புரி மஸ்ஜிதின் தலைமை இமாம் டாக்டர். முஃப்தி முஹம்மது முகர்ரம் அஹமது தொடங்கி வைப்பார். கமால் ஃபரூக், பாபரி மஸ்ஜித் வழக்கின் வழக்கறிஞர் ஜஃபரியாப் ஜீலானி, சுஹைப் இஃக்பால், டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான், டாக்டர் அர்ஷிகான், ஏ.செய்யது, ஹாஃபிழ் மன்சூர் அலி கான் மற்றும் பலர் கலந்து கொண்டு உரை நிகழ்த்த இருக்கின்றார்கள். "நீதிக்காக மக்களின் உரிமைகள்" என்ற தலைப்பில் மதியம் 2.00 மணி அளவில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெறும். இதில் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.ஜீலானி, கவிதான் ஸ்ரீவஸ்தாவா, டாக்டர் உதித் ராஜ், டாக்டர் சம்சுல் இஸ்லாம், சுரேஷ் கயிர்னர், மற்றும் பலர் இதில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கின்றனர்.

மாநாட்டின் செய்தியையும், அதன் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் நாடக அரங்கேற்றம் மற்றும் வீடியோ காட்சிகளின் மூலமாக தலைநகர் முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பிரச்சாரங்களின் வாயிலாக‌ தேசம் சந்தித்துக்கொண்டிருக்கும் ஆபத்துக்களையும், எதிர் கொள்ள வேண்டிய சவால்களை பற்றிய விரிவான பார்வையின் அடிப்படையில் நடைபெற்றது. ஒவ்வொரு இடங்களிலும் நடைபெற்ற கருத்தரங்கங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் தெருமுனைக்கூட்டங்களின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்திருக்கின்றனர்.

அதே போன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக "நயா கதம்" (புதிய எட்டு) என்ற தலைப்பில் கண்காட்சி ஒன்றினை நடத்த இருக்கின்றது. இந்தியாவில் ஓரங்கப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்கான வெளிப்பாடினை விவரிக்கும் வகையில் இந்த கண்காட்சி நடைபெறும். நாளை மாலை (வெள்ளிக்கிழமை) சரியாக 3.00 மணி அளவில் கண்காட்சி திறந்துவைக்கப்படும். 27ஆம் தேதி இரவு 9.00மணி வரையிலும் மக்களின் பார்வைக்காக கண்காட்சி திறந்துவைக்கப்படும். சனிக்கிழமை மாலை இந்திய கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாநிலங்களிலிருந்தும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களால கலாச்சார நிகழ்ச்சியும் நடைபெறும். சமூக நல இயக்கமாக செயல்பட்டு வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இதற்கு முன்னர் 2007ஆம் ஆண்டு பெங்களூரில் வலிமையான இந்தியாவை உருவாக்க மாநாடு மற்றும் 2009ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தேசிய அரசியல் மாநாடு ஆகிய இருபெரும் நிகழ்ச்சியை நடத்தி இருக்கின்றது. இந்த இரு மாநாடுகளும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்ட சமூகங்களின் விடுதலைக்காக போராட வேண்டும் என்ற உத்வேகத்தை தென்இந்திய மக்களிடம் ஏற்படுத்தியது.

தேசத்தின் மீது அக்கறை கொண்ட, நீதியை நிலை நாட்ட விரும்புகின்ற ஒவ்வொரு இந்திய குடிமக்களையும் இம்மாநாட்டிற்கு வரும்படி அன்போடு அழைக்கின்றோம். மாநாட்டின் செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்குமாறு ஊடகத்துறை நண்பர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.


பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது கலந்து கொண்ட பாபுலர் ஃப்ரண்டின் தலைவர்ள் விபரம் வருமாறு:

இ.எம். அப்துர் ரஹ்மான் (தேசிய தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட்)
கே.எம். ஷரீஃப் (தேசிய பொதுச்செய்லாளர், பாப்புலர் ஃப்ரண்ட்)
முஹம்மது அலி ஜின்னா (மாநாட்டு ஒருங்கினைப்பாளர், சமூக நீதி மாநாடு)
முஹம்மது ஷாஃபி (மாநாட்டு ஒருங்கினைப்பாளர் குழு உறுப்பினர்)
அனீஸ் அஹமது (ஊடக தொடர்பாளர்)

No comments:

Post a Comment