Wednesday, November 23, 2011

காஷ்மீர் யாருக்கு சொந்தம்! அருந்ததிராய்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக ஆர்வலரான அருந்ததி ராய், காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல என கூறினார்.  இந்நிலையில் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் மாநில பண்டிட்கள் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளனர்.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14,15 தேதிகள் இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் இரண்டு தனித்தனி நாடுகள் சுதந்திரம் அடைந்தன. இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் அப்போது இருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ராஜாக்களின் ஆட்சியின் கீழ் இருந்த பிரதேசங்களை என்ன செய்வது?


”இந்தியப் பகுதிதியிலுள்ள சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணையலாம். பாகிஸ்தான் பகுதியிலுள்ள சமஸ்தானங்கள் பாகிஸ்தானுடன் இணையலாம்” என்று சொல்லி விட்டார். பிரிட்டிஷ் அரசின் கடைசிப் பிரிதிநிதி மவுண்ட் பேட்டன். அதன்படி பெரும்பாலான சமஸ்தானங்கள் இணைந்து விட்டன.


ஆனால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடுவில் அமைந்த விட்ட ஜம்மூ-காஷ்மீர் சமஸ்தானம் எந்த நாட்டுடன் இணைவது? ஜம்மு-காஷ்மீரின் அன்றைய மக்கள் தொகையில் 75 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள் என்பதால் பாகிஸ்தானுடன் இணைவதா? அல்லது ஜம்மு-காஷ்மீரின் ராஜா ஹரிசிங் ஒரு இந்து என்பதால் இந்தியாவுடன் இணைவதா?


”எந்த நாட்டுடனும் இணையமாட்டோம். ஜம்மு-காஷ்மீர் தனிநாடாக, சுதந்திர நாடாக விளங்கும் ”அது சரிதான். ஆனால் இங்கு மக்கள் ஆட்சிதான் நடக்க வேண்டும். மன்னராட்சிக்கு இடமில்லை மன்னனே வெளியேறு” என்று சிறையிலிருந்து ஒரு குரல். காஷ்மீர் சிங்கம் என்று ஜவஹர்லால் நேருவால் போற்றப்பட்ட ஷேக் அப்துல்லாஹ் தான் அந்தச்சிறைப்பறவை.


பாகிஸ்தானிலிருந்து ஆயுதமேந்திய பலர் ஜம்மு – காஷ்மீருக்குள் ஊடுருவி ஆக்ரமிக்க முயன்றார்கள். இதைத் தடுக்க ராணுவ உதவி செய்யுமாறும் ஜம்மு – காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க அனுமதிக்குமாறும் ராஜா ஹரிசிங் இந்தியா அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனால் இந்திய படைகளுக்கும், பாகிஸ்தான் படைகளுக்கும் இடையே போர் நடந்தது.


இந்தியா இந்த பிரச்னையை  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு சென்றது. அதில் இந்தியா குறிப்பிட்டதாவது  சர்வதேச மேற்பார்வையின் கீழ் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி மக்களின் தீர்ப்பை ஏற்போம் என்றும் இந்திய அரசுத் தெளிவாக அறிவித்தது. எனவே ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தானின் தலையீட்டை நிறுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று இந்தியா அரசு தனது மனுவில் கூறியது.


இதையடுத்து 1948 ஏப்ரல் மாதம் 21 அன்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. ஜம்மு – காஷ்மீரில் மக்கள் கருத்தை அறிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இதற்கான ஏற்பாடுகளை ஐ.நா சபையின் விஷேஷக் கமிஷன் செய்ய வேண்டு மென்றும் தீர்மானம் கூறியது. கமிஷன் உறுப்பினர்கள் இரு அரசுகளுடனும் பேசி பேச்சு வார்த்தை நடத்திப் பல தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.


அதன்படி, 1949 ஜனவரி 1ம் தேதி முதல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்.. ஜம்மு – காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் பழங்குடியினர் வெளியேற வேண்டும். அதையடுத்து பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவத்தினரின் பெரும் பகுதி வாபஸ் ஆகவேண்டும். அதன் பிறகு மக்கள் கருத்தறிய வாக்கெடுப்பு நடத்தப்படும். என்று அந்தத் தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி போர் நிறத்தம் மட்டும் ஏற்பட்டது, போர் நிறுத்த எல்லை வகுக்கப்பட்டது. ஆனால் தீர்மானத்தின் மற்ற அம்சங்கள் இன்றுவரை செயல்படுத்தப் படவில்லை.


போர் நிறுத்த எல்லைக் கோட்டுக்கு வடக்கில் உள்ள காஷ்மீர் பகுதி பாகிஸ்தான் வசமும், தெற்கில் உள்ள பகுதி இந்திய வசமும் நீடித்து வருகின்றன. இந்தியவசம் உள்ள காஷ்மீர் ஜம்மு காஷ்மீர் என்றும் பாகிஸ்தான் வசம் உள்ளது ஆசாத் கஷ்மீர் என்றும் அழைக்கப்படுகின்றன.


சிந்திக்கவும்:
இந்திய, பாகிஸ்தானிய பயங்கரவாத அரசுகளுக்கு காஷ்மீர் சொந்தமானது இல்லை. அருந்ததி ராய் சொன்னதுபோல் காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் விரும்புவதுபோல் சுதந்திர காஷ்மீர் நாடு  அமைவதற்கு உதவுவதே இந்திய மற்றும் பாகிஸ்தானிய பயங்கரவாத அரசுகளுக்கு நல்லது.

இவர்கள் இருவரும் வல்லரசு போதையில் ஆயுதங்களை வாங்கி குவித்து மக்களின் நலன்களை புறக்கணிப்பார்கள் என்றால் இந்த இரண்டு நாடுகளும் ரஷ்யாவை போல் உடைந்து பல்வேறு மொழி மற்றும் இனம் சார்ந்த நாடுகளாக மாறிப்போகும்
என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதே கருத்தை  மனித நேய ஆர்வலர் அருந்ததி ராய் சொன்னதற்கு தான் இந்த பண்டிட்டுகள் இப்படி குதிக்கின்றனர்.

காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ சொந்தமான தல்ல என்கிற உண்மையை சொன்னதற்கு அவர் மேல் பொது நல வழக்கு தொடுக்கும் இந்த பண்டிட்டுகளுக்கு காஷ்மீர் சுதந்திரத்தை பற்றி எந்த அக்கறையும்
கிடையாது. சொந்த நாட்டின் விடுதலையை நிராகரிக்கும் பண்டிட்டுகள் நிச்சயம் காஷ்மீரின் போர்வீக குடிகளாக இருக்க முடியாது என்றே எண்ணத்தோன்றுகிறது.

இலங்கையில் சிங்கள பேரினவாதத்திற்கு உதவி செய்து  இரண்டு இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த  கையேடு தமிழக மீனவர்களை கொல்ல இலங்கை ராணுவத்திற்கு பயிற்ச்சியும் அளித்ததை பார்த்த  தமிழக மக்கள் இந்தியாவை விட்டு பிரிந்து போவது என்று முடிவெடுத்து விட்டார்கள்.
அதுபோல் சத்திஸ்கரில் பழங்குடி மக்களின் நிலங்களை அந்நிய முதலாளிகளுக்கு கொடுக்க ஒரு உள்நாட்டு போர் நடத்தி அந்த மக்களும் தனி நாடு கேட்கிறார்கள். இதுபோன்ற அரசு அடக்குமுறைகள், அரசு  பயங்கரவாதங்கள் தொடருமே ஆனால் இந்தியா பல நாடாக பிரிந்து போகும் என்பதை யாராலும் தடுக்க முடியாது.

No comments:

Post a Comment