காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் மீண்டும் அன்னா ஹஸாரேவிற்கு எதிரான தனது விமர்சனத்தை கூறியுள்ளார். காந்தியவாதியான அன்னா ஹஸாரேவின் போராடத்திற்கு அனுமதி ஏன் மறுக்கப்படுகிறது என்பதை இதுவரை அவர் உணர்ந்து கொள்ளவில்லை எனக்கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் உடனான தொடர்பே இதற்கு முக்கிய காரணம் என்பதனையும் தெரிவித்துள்ளார் திக்விஜய்சிங்.
ஊழலுக்கு எதிரான தங்களது போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ் தனது முழு ஆதரவை தெரிவித்திருப்பதால் ராம்தேவும் ஆர்.எஸ்.எஸ்ற்கு விசுவாசமாக நடந்து கொள்கிறார். ஆனால் தனக்கும் ஆர்.எஸ்.எஸ்ற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஏன் அன்னா ஹஸாரே மறுத்துவருகிறார் என்பது தான் நமக்கு புரியாத ஒன்றாக இருக்கிறது என திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
சமீபத்தில் பா.ஜ.க வின் தலைவர் நிதின்கட்காரி எழுதிய புத்தகத்தை ஹிந்து ஆன்மீக குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஒரு விழாவில் கலந்து கொண்டு வெளியிட்டார். ஆர்.எஸ்.எஸ்ற்கும் ஆன்மீக தலைவர்களுக்கும் இடையே உள்ள உறவைப்பற்றி குறிப்பிடுகையில் திக்விஜய்சிங் இதனை தெரிவித்தார்.
ரவிசங்கர் புத்தகம் வெளியிட்ட விழாவின் போது ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களான அத்வானியும், சுரேஷ் சோனிஜியும் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாழும் கலை நிர்வாகத்தின் தலைவராகவும் ஆன்மீகத் தலைவராகவும் விழங்கும் ரவிசங்கருக்கும் ஆர்.எஸ்.எஸ்ற்கும் உள்ள தொடர்பை பற்றிய தனது கருத்தை டுவிட்டரில் வெளியிட்டார் திக்விஜய்சிங்.
பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் தீவிரவாத தாக்குதல்களிலிருந்து திசை திருப்பவே ஊழக்கு எதிரான அன்னா ஹஸாரே மற்றும் ராம்தேவின் போராட்டங்கள் நடைபெறுவதாக திக்விஜய்சிங் குற்றம் சுமத்தியுள்ளார். எனவே ரவிசங்கரும் இத்தகைய சூழ்ச்சிகளுக்கு பலியாகாமல் ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.
தான் 2001 ஆம் ஆண்டுகளில் மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்த போது ரவிசங்கரின் வாழும் கலை நிர்வாகத்தில் சேர்ந்து தியானப் பயிற்சி பெற்றிருப்பதாகவும் எனவே ரவிசங்கர் அவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இது பற்றி ரவிசங்கரிடம் கேட்டபோது ஒவ்வொருவருக்கும் தனது சொந்த கருத்துக்களை வெளியிட உரிமை இருக்கிறது. அவை அனைத்திற்கும் பதில் சொல்ல வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லை எனக்கூறி முடித்துவிட்டார்.

No comments:
Post a Comment