சமீபத்தில் அக்டோபர் 11 ஆம் தேதி அன்று டெல்லி பல்கழைக்கழகம் பி.ஏ பட்டாதாரிகளுக்கான பாடப்பிரிவில் இருந்து ஏ.கே. ராமானுஜம் என்பவர் எழுதிய "முன்னூறு விதமான இராமாயண கதைகள்" என்ற கட்டுரையை நீக்க முடிவெடுத்தது. இந்தியக்கலாச்சாரம் என்ற பாடத்தில் இடம்பெற்ற இந்த கட்டுரையில் இந்துக்கள் கடவுளாக வணங்கும் அவதாறப்புருஷணான இராமணுக்கு பல கதைகள் இருப்பதாக கூறுகிறது. பல்கழைகழகத்தின் நான்கு நிர்வாகிகள் ஒன்று கூடி விவாதித்த போது இறுதியாக இளநிலை பட்டாதாரி மாணவர்களால் கடவுளாகக் கருதப்படும் இராமனுக்கு இத்தகைய கதைகள் இருப்பதை மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அதனை நீக்கி விடலாம் என்று முடிவெடுத்திருக்கின்றனர்.
பாடத்திட்டத்தில் இந்த கட்டுரை சேர்த்ததிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவ அமைப்பான ஏ.பி.வி.பி (அகில பாரதீய வித்யார்த்த பரிஷத்) மாணவர்களைக்கொண்டு கடந்த 2008ஆம் ஆண்டுகளில் போராட்டங்களிலும் வன்முறைகளிலும் ஈடுப்பட்டிருக்கிறது.
வரலாற்று ஆசிரியரான ஏ.கே. ராமானுஜம் எழுதிய "ராமானுஜம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு" (ஆக்ஸ்ஃபோர்டு 1999) என்ற புத்தகத்தில் இருந்து இக்கட்டுரை எடுக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு ஒரு மாதம் கழித்து புனே நகரில் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களால் ஷாஹத் கண்காட்சி அடித்து நொறுக்கப்பட்டது. காரணம் இராமாயணம் பற்றிய விதவிதமான கதைகளை கொண்ட புத்தகங்கள் இடம்பெற்றிருந்ததால் ஆர்.எஸ். எஸ் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள். "ஜதகா" என்ற புத்த மத பதிப்புகளின் இராமனும் சீதையும் சகோதர சகோதரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம். இது அவர்களுடைய நம்பிக்கைக்கு அவமரியாதை ஏற்படுத்துகிறது என்று கூறி ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் அந்த பதிப்பகத்தையும் அடித்து நொறுக்கியுள்ளார்கள். ராமானுஜம் எழுதிய கட்டுரைகளில் இராமனுக்கு பலவிதாமான கதைகள் இருப்பதாக கூறுகிறார். அவைகளைப்பற்றி சிறிது பார்ப்போம்.!

பல்வேறு வகையான இராமாயணக்கதைகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு புத்த இராமாயணம், ஜெய்ன இராமாயணம், வால்மிகி எழுதிய இராமாயணம் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பவுலா ரிச்மான் என்ற பெண் எழுதிய "பல்வேறு விதமான இராமாயணங்கள்" என்ற புத்தக்கத்திலும் இவற்றைப்பற்றி விரிவாக கூறியுள்ளார். வால்மிகி எழுதிய இராமாயணத்தில் கூட பல்வேறு விதமான விளக்கங்கள் கூறப்பட்டுள்ளது. பொதுவாக இந்த அரசியல் வாதிகள் தங்களது அரசியல் செல்வாக்கை உயர்த்திக்கொள்வதற்காக அத்தகைய விளக்கங்களை ஏற்றுக்கொள்வதில்லை.
மத நம்பிக்கை என்று வெறுமனே வாய்வார்த்தையில் கூறுவிட்டு அரசியல் செல்வாக்கிற்காகவும், இந்துக்கள் மத்தியில் மத துவேஷத்தை ஏற்படுத்துவதற்காக மட்டுமே இராமன் என்கிற கதாபாத்திரத்தை உபயோகப்படுத்தி வருகிறார்கள். இந்து மதத்தில் மட்டுமே சகிப்புத்தன்மை இருப்பதாகவும் மற்ற மதங்களில் அதை காண முடியாது என்று வெற்றுப்பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.
இராமாயணத்தை பற்றி கூறும் ஒவ்வொருவரின் விளக்கங்களையும் படித்து ஆராய்ந்து பார்த்தால் இராமாயணம் என்ற கதை எந்தளவிற்கு உண்மை என்பது தெரிந்துவிடும். வால்மிகி எழுதிய இராமாயணமாகட்டும், துலசிதாஸ் எழுதிய இராமாயணமாகட்டும் அல்லது தொலைக்காட்சி சேனல்களில் ராமானந்த் சாகர் தயாரிப்பில் ஒளிப்பரப்பப்படும் இராமாயணம் ஆகட்டும் இப்படி ஒவ்வொன்றும் மற்றொன்றோடு ஒப்பிட்டு பார்க்கும்போது பெருமளவில் வித்யாசப்படுகின்றன. இராமாயணக்கதைகள் இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு பெங்காளி, காஷ்மீரி, தாய், சின்ஹாலா, தமிழ், திபத்தியன், இது போக இன்னும் எண்ணற்ற மேற்கத்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் தரும் செய்தி என்னவென்றால் இதில் ஒன்று கூட மற்றொன்றோடு பொருந்தவில்லை.
மற்ற மொழிபெயர்ப்புகளை ஏற்க மறுக்கும் இவர்கள் வால்மிகி எழுதிய இராமாயணத்தை மட்டுமே உண்மை என்று தங்களது அரசியல் இலாபத்திற்காக நம்புகின்றனர். அன்றைய கால ஜாதிமுறையையும், வர்ணாசிரமக்கொள்கையையும் மீண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கும் இவர்கள் வால்மிகி எழுதிய இராமாயணத்தை மட்டும் ஏற்றுக்கொள்வதற்கான முக்கிய காரணமாகும்.
இராமாயணக்கதைகளில் உள்ள வித்தியாசங்களை ஒருவர் படிக்கும்போது சுவாரஸ்யமாகவும் அதே சமயம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது. "தசரத ஜதகா" என்ற புத்த இராமாயணத்தை படிக்கும்போது அதில் இராமனுக்கு சீதா மனைவியாகவும் அதே சமயம் சகோதரியாகவும் இருந்திருக்கிறார் என்று கூறுகிறது. மேலும் இராமனின் தந்தையான தசரதன் அயோத்தியின் மன்னர் இல்லை என்றும் வாரனாசியின் மன்னர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சத்திரிய பாரம்பரியத்தில் தங்களது குலத்தூய்மையை பராமரிப்பதற்காகவும், தூய்மை படுத்துவதற்காகவும் சகோதரனும், சகோதரியும் திருமணம் செய்துகொள்வது பழக்கத்தில் இருந்து வந்ததாகவும் கூறுகிறது இந்த இராமாயணம். மேலும் இராமன் புத்தரை பின்பற்றினார் என்றும் கூறுகிறது.
அதே போன்று ஜெயின மத இராமாயணத்தில் இராமன் ஜெயின மத போதகராக இருந்தார் என்றும், அஹிம்சையை போதித்தார் என்றும் கூறுகிறது. புத்த மத இராமாயணத்திற்கும் ஜெயின மத இராமாயணத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமையானது இரு இராமாயணங்களும் இராவணனை யோக்கியவன் என்றும், ஆன்மீக முனிவராக இருந்தார் என்றும், நியாயமாக நடந்து கொண்ட ஒரு அரசர் என்றும், அறிவுள்ள கம்பீரமான அரசர் என்றும் கூறுகிறது.
தெலுங்கு பிராமணர்களின் பிரபல "இராமாயண பாடல்கள்" ஒன்றில் சூர்பனகை இராமனை பழிவாங்கியதாக கூறுகிறது. தாய் மொழியில் உள்ள இராமாயணத்தில் சீத்தாவினால் அவமானம் இழந்த சூர்ப்பனைக்காக அவளது மகள் இராமனை பழிவாங்குவதாக கூறப்படுகிறது. இதில் ஆச்சரியத்தக்க செய்தி என்னவெனில் ஹனுமனை பற்றிக்கூறும்போது அவர் பிரம்மச்சாரி அல்ல என்றும், பயபக்தி கொண்டவன் அல்ல என்றும் ஆணாகவும் இல்லாமல், பெண்ணாகவும் இல்லாமல் இரண்டு கலந்த ஒரு படைப்பாக இருந்தான் என்றும் கூறுகிறது. அத்தோடு நிற்கவில்லை,

இலங்கையில் உள்ள வீடுகளில் திருட்டுத்தனமாக படுக்கை அறையை உற்று நோக்குபவனாக இருந்தான் என்றும் கூறுகிறது. வால்மிகி, கம்பர் மற்றும் தமிழ் இதிகாசங்களில் வருகின்ற இராமாயணத்தை பொறுத்தவரை இன்னொருவரின் மனைவி தூங்கிக்கொண்டிருக்கும்போது கூட அவளை பார்ப்பது ஹனுமனை பொறுத்தவரை பாவச்செயலாகு. ஆனால் தாய் மொழியில் இருக்கின்ற இராமாயணத்தில் கதை வேறு விதமாக உள்ளது. அவ்வாறிருந்தும் ஹனுமன் இன்று வரை தாயை பொறுத்தவரை சிறந்த கதாநாயகனாக கருதப்படுகிறான். ஜெயின் இராமாயணத்தை போன்றே தாய் இராமாயணத்திலும் இராவணனின் வம்சாவழியே குறிப்பிடப்பட்டுள்ளது இராமனின் வம்சாவழியை அல்ல.
இராமாயணம் என்பது உயர் ஜாதியினரான பிராமணர்களுக்கும் கீழ் ஜாதியினர்களான ராக்ஷ்ர்களுக்கும் நடக்கும் யுத்தமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலாதிக்கத்தை உயர்த்தவே இவ்வாறான கதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் வால்மிகி எழுதிய இராமயணத்தையே படித்திருந்தனர். இராமன் தலித்தாக இருந்த சம்புகனை கொன்றதே அம்பேத்கருக்கு இந்து மதத்தின் மீதும் இராமாயணத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. இராமாயணம் பற்றி அம்பேத்கர் கேள்வி எழுப்பும் போது சீதை கற்பமடைந்தபோது அவளுக்கு எதிராக வந்த வதந்திகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற ரீதியில் அவளை அக்னிபரிட்சை செய்ய சொன்னது எந்த வகையில் நியாயம்? என்று கேட்டுள்ளார். இராவனனை ஒழித்து சீதையை மீட்டுக்கொண்டு வந்ததது சீதைக்காக அல்லாமல் தன்னுடைய கவுரவத்திற்காகத்தான் என்று இராமன் கூறுகிறான்.
இராமாயணத்தை பற்றி தந்தை பெரியார் கூறும் போது வட இந்திய ஆரியர்களுக்கும் தென் இந்திய திராவிடர்களுக்கும் இடையே நடந்த போரை இராமாயணம் என்கிற பெயரில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். திராவிடர்களை கீழ் ஜாதியினர் என்றும் ஆரியர்களை உயர் ஜாதியினர் என்று விவரிக்கும் இராமாயணத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். சுய மரியாதை இயக்கத்தை தொடங்கிய தந்தை பெரியார் தீண்டாமை கொள்கையை விதைக்க நினைக்கும் இராமாயணத்திற்கு எதிராக தமிழகத்தில் கடுமையான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மனுஸ்மிதியை எதிர்த்த அம்பேத்கர் ஒரு முறை இராமனின் புகைப்படத்தை தீயிட்டு கொழுத்த முயன்றார். அம்பேத்கரை பொறுத்தவரை இராமன் என்ற கதாபாத்திரம் தலித் மக்களை அடிமைபடுத்த நினைக்கும் உயர் ஜாதி இந்து என்றே எண்ணினார். பெரியார் இராமாயணத்தை பற்றி மேலும் கூறுகையில் இராவணம் ஒரு திராவிடன் என்றும் தனது தங்கை சூர்பனகை இராமனால் அவமானத்திற்கு ஆளாக்கப்பட்டதன் விளைவே இராமனை பலிவாங்குவதற்காக சிதையை கடத்தினான். மற்றபடி இராவணன் நல்லவன் என்றும், சிறந்த ஆட்சியாளனாக விளங்கினான் என்றும் கூறுகிறார்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதனோடு தொடர்புகொண்ட அரசியல் வாதிகளின் தலையீட்டால் தான் இராமாயணம் பற்றிய இந்த செய்திகள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
இராமன் என்பவன் யார்? எத்துனை ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவன்? அவன் வாழ்ந்ததற்கான வரலாற்றுச்சான்றுகள் எதாவது உள்ளதா? என்று பார்க்கும் போதும், இராமாயணம் பற்றிய வெவ்வேறு கதைகளை பார்க்கும்போதும் இது வெறும் கட்டுக்கதையே என்பது தெளிவாகிறது. வெறும் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு ஒரு சமூகத்திற்கு எதிராக இவர்கள் தொடுத்து வரும் போர் இவர்களுக்கே கேடாக அமையும் என்பதை வெகு சீக்கிரமே உணர்ந்து கொள்வார்கள்.
இராமன் தான் எனது கடவுள், அவர் ஒரு அவதாரப்புருஷன், இராமர் கோயிலை அயோத்தியில் கட்டியே தீருவோம் எனறு ரதயாத்திரை நடத்தி 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமாயிருந்த அத்வானியின் வீட்டு பூஜை அறையில் இராமர் சிலையே கிடையாதாம்! என்பது கூடுதல் தகவல்.

நன்றி : டூசர்கில்ஸ்
தமிழில்: முத்து
No comments:
Post a Comment