Tuesday, November 15, 2011

அத்வானியின் ரதயாத்திரையில் அழுகிய முட்டை வீச்சு

புதுடெல்லி:பஞ்சாபில் எல்.கே.அத்வானியின் ஜனசேதனா ரத யாத்திரையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் அழுகிய முட்டையை வீசினர். கறுப்புக் கொடியும் காட்டப்பட்டது. பஞ்சாபில் சங்கேரா கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

சிரோமணி அகாலிதள்(அமிர்தரஸ்) மற்றும் சில முஸ்லிம் அமைப்புகள் ரதயாத்திரைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அத்வானியின் ரதயாத்திரை வாகனங்கள் செல்வது சிறிது நேரம் தடைப்பட்டது. அழுகிய முட்டை வீசப்பட்டதால் அசுத்தமான அத்வானி பயணித்த வாகனத்தை சுத்தப்படுத்திய பிறகு யாத்திரை தொடர்ந்தது.
பதிந்தா, ஸாங்க்ரூர் ஆகிய மாவட்டங்களிலும் அத்வானியின் ரதயாத்திரைக்கு எதிராக போராட்டம் நடந்தது.

No comments:

Post a Comment