Friday, November 25, 2011

"டேம் 999 தரும் பாடம்" தமிழ்நாடு தமிழர்களுக்கே!

முல்லைப் பெரியாறு அணையை மையமாக வைத்து, அணை உடைவது போன்று தயாரிக்கப்பட்ட  படமே  "டேம் 999".

இந்த அணையை உடைத்து விட்டு வேறு தாழ்வான பகுதியில் அணையை கட்டி தமிழகத்துக்கு வரும் நீரை தடுப்பதே கேரளா அரசின் திட்டம்.


முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வரும் நீரால் தமிழகத்தில் 13 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு நீர்ப்பாசனம் கிடைக்கிறது.  இந்த அணையை எப்படியாவது உடைக்க வேண்டும் என்பதற்காக கேரள அரசு பல சூழ்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

அணையை உடைக்க வேண்டிய தேவையில்லை என்றும் அந்த ஆணை பாதுகாப்பானதாகவே இருக்கிறது என்றும்  நிபுணர்கள் குழு அறிக்கைகள் தெரிவித்த பின்னரும் கேரளம் வேண்டும் என்றே இதில் பிடிவாதம் காட்டி வருகிறது.
அணை உடைவதைப் போல் காண்பிக்கும் இந்த படத்தினை திரையிடக்கூடாது என்று தமிழகத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது. 

இந்தப் படம் இந்தியாவில் வெள்ளிக்கிழமை வெளியிடத் திட்டமிடப் பட்டுள்ளது. 
இந்நிலையில் இப்படத்தை  தமிழகத்தில் திரையிட மாட்டோம் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சிந்திக்கவும்:
எங்கே போனார்கள் நம் போலி தேசபக்தி வடவர்கள். ஏன்யா! தமிழ் நாட்டு மின்சாரம் கேரளாவுக்கு வேண்டும், தமிழ் நாட்டு அரிசி, மீனு, காய்கறி வேண்டும் தண்ணி மட்டும் கொடுக்க மாட்டே! தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் "கேரளத்து நாயரு டீக்கடை" நீ பிழைக்க தமிழன் வேண்டும் ஆனால் தண்ணி கொடுக்க மாட்டே.

கர்நாடகக்காரனுக்கு நம்ம மின்சாரம் வேண்டும், நம்ம உணவு பொருள் எல்லாம் வேண்டும் ஆனால் தண்ணி மட்டும் தரமாட்டான்.
வீணா தண்ணிய கடலுக்கு திறந்து விட்டாலும் விடுவானே தவிர தமிழனுக்கு தரமாட்டான். இந்தியாவுடன் இருப்பதால் தமிழகத்துக்கு எந்த நன்மையையும் இல்லை. நம்மை சுரண்டி பக்கத்து மாநிலத்துகாரனுக்கு கொடுப்பான் இந்த வடநாட்டு ஆட்சிகாரன்.

அதனாலேயே கேட்கிறோம் தமிழர்களுக்கு என்று "தனி நாடு" வேண்டும் என்று. தமிழகத்தில் எல்லா வளமும் இருக்கிறது.
நம் மக்களுக்கு தேவையானதை நாமே நிறைவேற்றி கொள்ள முடியும். இதை எல்லாம் நாம் சொன்னால் இந்திய தேசபக்தி அடிமைகளுக்கு பொறுக்காது. இந்தியாவை விட்டு தமிழகம் பிறியும் காலம் வந்து விட்டது. அந்த காலம் வெகு தூரத்தில் இல்லை. தமிழா ஒன்று படு! தமிழ் நாடு தமிழர்களுக்கே என்று சொல்லு!!
ரௌத்திரம் பழகு 
...யாழினி...

No comments:

Post a Comment