Tuesday, November 22, 2011

ஆர்.எஸ்.எஸ்-ற்கு பல்லக்கு தூக்கும் தினமலரின் மற்றுறொரு செய்தி

திருப்பூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது எத்துனையோ சமூக, சமுதாய அமைப்புகள் களம் இறங்கி நிவாரணப்பணிகளில் ஈடுபட்டது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் என்ற ஒரு இயக்கம் மட்டுமே மீட்புப் பணிகளில் ஈடுபட்டது போன்ற செய்தியை வெளியிட்டிருக்கிறது தினம் மலர்  என்ற ஃபாசிஸ பத்திரிக்கை.

சமீபத்தில் திருப்பூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான மக்கள் அவதிப்பட்டு வீடுகளை இழந்து, உடமைகளை இழந்து மிகவும் சிறமப்பட்டனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட அடுத்த நாள் முதலே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஈத் பெருநாள் என்று கூட பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கி மக்களுக்கான் நிவாரணப்பணிகளின் ஜாதி, மத பேதமின்றி பணியாற்றினர். சமீபத்தில் வெளியான புதிய தலைமுறை பத்திரிக்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் கூறும் போது "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவினர் தான் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாது நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு எங்களை காப்பாற்றினார்கள்" என்று கூறியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மட்டுமல்லாது எண்ணற்ற சமூக இயக்கங்கள் இதிலே ஈடுபட்டு பணியாற்றினர். ஆனால் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத தினமலர் நாளிதழ் தனது தீவிரவாத முகத்திரையை மறைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ். போடும் வேஷங்களை வெளியிட்டு ஆர்.எஸ்.எஸ்-யை மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அமைப்பாக காட்ட முயல்கிறது தினமலர் பத்திரிக்கை.

அரசாங்கம் என்னவோ தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றாலும் ஆர்.எஸ்.எஸ் என்ற ஒரு இயக்கம் மட்டுமே மக்களுக்காக சேவை செய்தது என்று கூறுகிறது தினமலர் பத்திரிக்கை.

வெள்ளம் புகுந்த அடுத்த நாள் காலை முதலே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் அங்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு குடி அமர்த்தும் வகையில் மண்டபம் ஒன்றை ஏற்பாடு செய்து அங்கே அவர்களை தங்க வைத்தது. அடுத்தபடியாக பல்லாயிரக்கணக்கான மக்களின் பசியை முதலில் போக்கும் வகையில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆர்.எஸ்.எஸ் பண்டாரங்கள் அங்கே வந்து முஸ்லிம்கள் கொடுக்கும் உணவை வாங்காதீர்கள் என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அம்மக்கள் ஒழுங்கு மரியாதையாக இந்த இடத்தை விட்டு செல்லுங்கள் என்று மிரட்டி, காரி உமிழ்ந்து அனுப்பியிருக்கின்றனர்.

அதே போன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உணவுகளை வழங்கும்போஒது ஜாதி, மத பேதமின்றி அனைவருக்கும் சேவையை புரிந்தது. ஆனால் இந்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் மதச்சாயம் பூசும் படியாக இந்துக்களுக்கு மட்டுமே சிறிதளவில் நிவாரணத்தை வழங்கி அதை பெருமிதத்துடன் தன்னுடைய தளத்தில் வெளியிட்டிருக்கிறது.

நாம் தினமலருக்கு கேட்கும் கேள்வி என்னவெனில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஜும்மா தொழுகை நிறைவேற்றி விட்டு வந்தவர்களிடம் நிவாரணத்தொகை வசூலித்ததே! அந்த செய்திகள் உங்களுக்கு தெரியாதோ?

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட அன்று ஈதுப்பெருநாளாக இருந்தும் திருப்பூர் முஸ்லிம்கள் பெருநாளை ரத்து செய்துவிட்ட அடுத்த நாள் கொண்டாடினார்களே! இந்த செய்தியும் உங்களுக்கு கிடைக்கவில்லையோ?

இப்படி ஆர்.எஸ்.எஸ்ற்காக பல்லக்கு தூக்கும் தினமலர் பத்திரிக்கையே! சமீபகாலமாக இந்தியாவில் நடக்கும் அனைத்து குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் ஆர்.எஸ்.எஸ் தான் என்ற உண்மை வெளிவந்து கொண்டிருக்கிறதே! அவற்றையெல்லாம் பத்திரிக்கை நடத்திக்கொண்டிருக்கும் உங்களுக்கு தெரியாமலா போய்விட்டது?

சமுதாய சொந்தங்களே! நடு நிலையானவர்களே! தினமலரின் இந்த அயோக்கியத்தனத்தை புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

No comments:

Post a Comment