சமூக நீதி மாநாடு
புது டெல்லி (ராம்லீலா மைதானம்) - 26 மற்றும் 27 நவம்பர் 2011
மாநாட்டிற்கான அழைப்பிதழ் மற்றும் வேண்டுகோள்
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேசத்தின் தலை நகரமான புதுடெல்லியில் ராம்லீலா மைதானத்தில் தேசிய அளவிலான "சமூக நீதி மாநாட்டை" நடத்த இருக்கிறது.
அநீதியை ஒழித்து சமூக நீதிக்காக போராட மக்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இம்மாநாடு நடத்தப்பட உள்ளது. நமது நாட்டின் சிறுபான்மை மக்கள் மற்றும் இன்ன பிற பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து இம்மாநாடு நடைபெறும்.
மாநாட்டின் முதல் நாள் "வலிமையை நோக்கி ஒன்றுபடுவோம்" மற்றும் "நீதிக்காக மக்களின் உரிமைகள்" என்ற இரு வேறு தலைப்புகளில் தேசிய அளவிலான கருத்தரங்கங்கள் நடைபெறும். மாநாட்டின் இரண்டாம் நாள் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் இம்மாநாடு நிறைவுபெறும்.
இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளில் வாழக்கூடிய முக்கிய மார்க்க உலமாக்கள், தலைவர்கள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள், சமூக சேவகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என அனைவரையும் அழைத்துள்ளோம். இவர்கள் அனைவரும் மாநாட்டின் வெவேறு நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்ய உள்ளனர்.
பிற்படுத்தப்பட்ட சமூகமான முஸ்லிம்களின் வலிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் பேரியக்கமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவாகும். இதற்கு முன் கடந்த 2007ஆம் ஆண்டு பெங்களூரில் வலிமையான இந்தியாவை உருவாக்க நடைபெற்ற மாநாட்டிலும், 2009ல் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற தேசிய அரசியல் மாநாட்டிலும் பெரும் திரளாக மக்கள் கலந்து கொண்டதோடுமட்டுமல்லாமல் இந்திய முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகவும் அமைந்தது. அது போன்று இன்ஷா அல்லஹ் இந்த மாதம் நடைபெறும் சமூக நீதி மாநாட்டிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நான் உங்கள் அனைவரையும் இம்மாநாட்டில் பங்குகொள்ளும் படி அன்புடன் வரவேற்கிறேன். எங்களுடைய உரிப்பினர்கள் அனைவரும் மாநாட்டிற்கான பிரச்சாரத்திலும் அதே சமயம் மாநாட்டிற்கான பொருளாதாரத்தை ஈட்டும் பணிகளிலும் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த கடிதத்தின் மூலம் இம்மாநாட்டிற்கான செலவுகளுக்கு தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். எஙகளுடைய சகோதரர்களை உங்களை வந்து சந்திக்க முடியாமல் போகலாம்! இருந்த போதிலும் தயவு கூர்ந்து எங்களுடை வங்கி கணக்கிற்கு உங்களுடைய நன்கொடைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ACCOUNT NAME: POPULAR FRONT OF INDIA (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா)
Account No. 90861010000865
Syndicate Bank, Delhi Dtc Depot Sukhdev Vihar Branch, New Delhi -110 020இறுதியாக இம்மாநாடு நல்லமுறையில் வெற்றி அடைவதற்காக துஆ செய்யுமாறு உங்களை அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.
இ.எம். அப்துர் ரஹ்மான் (தேசிய தலைவர்)
புதுடெல்லி - 25
No comments:
Post a Comment