குஜராத் இனப் படுகொலையின் போது 22 பெண்கள், எட்டு மாதம் பருவமுடைய குழந்தைகள் உள்பட 33 முஸ்லிம்களை உயிரோடு எரித்துக் கொலைச் செய்த வழக்கில் 31 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது விரைவு நீதிமன்றம் கூட்டுப் படுகொலையில் பலியானவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத் மாநிலம் கோத்ரா ரெயில் எரிப்பில் கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு முஸ்லிம்கள்தாம் காரணம் என பொய் பிரச்சாரம் சங்க்பரிவார பயங்கரவாதிகளால் வேகமாக பரப்பப்பட்டு ஏற்கனவே திட்டமிட்டப்படி ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொடூரமாக படுகொலைச் செய்யப்பட்டனர். முஸ்லிம் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இதில் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை எண்ணிகையில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்திய வரலாற்றிலேயே மிகக் கொடூரமான இனப்படுகொலை குஜராத்தில் நரேந்திர மோடியின் தலைமையில் அரங்கேறியது.
குஜராத் இனப்படுகொலையின் போது பயிற்சி எடுத்த ஆர்.எ.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்களை சேர்ந்த தீவிரவாதிகள் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் புகுந்து முஸ்லிம் ஆண்களை தாக்கி உறுப்புக்களை சேதப்படுத்தி, உயிரோடு தீயிட்டு கொழுத்தினர். பெண்களையும், சிறுமிகளையும் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய பிறகு தீயிட்டு கொழுத்தினர். கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்து சிசுவை சூழாயுதத்தால் குத்தி எடுத்து தீயிட்டு பொசுக்கினர். சிறு குழந்தைகளின் வாயில் பலவந்தமாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். அந்த குழந்தைகள் தீப்பிழம்புகளாக மாறி அலறுவதை கண்டு கைகொட்டி சிரித்தனர்.
கொடிய காட்டு மிருகங்கள் கூட இந்த செயலை கண்டால் வெட்கம் அடையும் அளவிற்கு கொடூரங்களை புரிந்தது மோடிதலமையிலான பயிற்சி எடுக்கப்பட்ட, சிறந்த உளவுத்துறையை தன்னகத்தே கொண்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.இதற்க்கு காவல்துறை மற்றும் மாநில உளவுத்துறையில் உள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதிகளும் உடந்தையாக இருந்து செயல்பட்டார்கள். அதுமட்டும் அல்ல மோடி ஒரு ராணுவ கமாண்டர் போல் இந்த கலவரத்தை நடத்த ஆணைகள் பிரபித்தான். மோடியின் அவையில் உள்ள அமைச்சர்கள் காவல்துறை கண்ரோல் ரூம்களில் உள்ள வயர்லஸ் கருவிகளை பயன்படுத்தி ஆணைகளை பிறபித்தார்கள் அந்த அளவுக்கு அரசு துறை இயந்திரங்கள் மோடிக்கு சலாம் போட்டன.
குல்பர்க் சொசைட்டி கூட்டு படுகொலை:
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இனப்படுகொலைகளுள் ஒன்று, குஜராத் படுகொலை. இந்து மதவெறிக் கும்பல் இப்படுகொலைகளை எவ்வளவு கொடூரமாகவும், வக்கிரமாகவும் நடத்தியது என்பதற்கு, குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு முக்கியமான சாட்சியமாக உள்ளது. இந்து மதவெறிக் கும்பல் இக்குடியிருப்பைச் சுற்றி வளைத்துத் தாக்கியபொழுது, அங்கு வசித்து வந்த இஹ்ஸான் ஜாஃப்ரி (முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்), அக்காலனியில் வசித்து வரும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறும், தங்களது உயிர்களைக் காக்குமாறும் மோடியையும், உயர் போலீஸ் அதிகாரிகளையும் திரும்பத்திரும்ப, பலமுறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கெஞ்சியிருக்கிறார்.
அதற்கு எந்தப் பலனும் கிட்டவில்லை. இஹ்ஸான் ஜாஃப்ரியைத் தெருவுக்கு இழுத்துவந்து, அங்கஅங்கமாக வெட்டி, உயிரோடு நெருப்பில் வீசியெறிந்து கொன்றது, இந்து மதவெறிக் கும்பல். ஜாஃப்ரி மட்டுமின்றி, அக்காலனியில் வசித்து வந்த மேலும் 69 முஸ்லிம்களும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இந்த குல்பர்க் சொசைட்டி படுகொலை முதலமைச்சர் மோடிக்கும், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தெரிந்தே, அவர்களின் ஆசியோடுதான் நடந்தது.
அதற்கு எந்தப் பலனும் கிட்டவில்லை. இஹ்ஸான் ஜாஃப்ரியைத் தெருவுக்கு இழுத்துவந்து, அங்கஅங்கமாக வெட்டி, உயிரோடு நெருப்பில் வீசியெறிந்து கொன்றது, இந்து மதவெறிக் கும்பல். ஜாஃப்ரி மட்டுமின்றி, அக்காலனியில் வசித்து வந்த மேலும் 69 முஸ்லிம்களும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இந்த குல்பர்க் சொசைட்டி படுகொலை முதலமைச்சர் மோடிக்கும், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தெரிந்தே, அவர்களின் ஆசியோடுதான் நடந்தது.
ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை:
குஜராத் இனப் படுகொலையின் போது நடந்ததுதான் ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை. ஸர்தார்புராவில் உள்ள வீடுகளை சங்க்பரிவார பாசிச பயங்கரவாதிகள் தீவைத்துக் கொளுத்தி எரித்து சாம்பலாக்கினர். சொத்துக்களை கொள்ளையடித்தனர். அருகிலிலுள்ள ஊரிலிருந்து கலவரத்திற்கு பயந்து ஸர்தார்புராவில் வீடுகளில் அபயம் தேடிய அப்பாவி முஸ்லிம்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு அவர்களின் கதறலையும் பொருட்படுத்தாமல் வெறித்தனமாக வீட்டிற்கு தீவைத்து எரித்துக் கொலைச் செய்தனர்.
சங்பரிவாரின் இந்த கொடிய செயலை ரீனு கன்னா என்ற சமுதாய ஆர்வலர் இப்படி கூறுகிறார். கலவரத்தில் பங்கெடுத்து கொண்ட சங்பரிவாரத்தினர் குறிப்பாக VHPவினர் முஸ்லிம் பெண்களை கொடூரமாக கற்பழிப்பதையே தங்களின் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டனர். ஹிந்து மதவெறியர்களின் மிருகத்தனமான பாலியல் பலாத்காரத்தில் முஸ்லிம் பெண்கள் அடைந்த வேதனையும், பாதிப்பும் எண்ணில் அடங்காதவை.
பெரும்பாலான பெண்கள் கற்பழிக்கப்பட்டு பின்னர் உயிருடன் எரித்து கொள்ளப்பட்டார்கள் என்று மாலினி கோஷ் என்ற அறுவர் குழுவின் உறுப்பினர் ஏப்ரல் 18, 2002 அன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது இதை கூறினார். சாய்ரா பானு என்ற ஒரு பெண் இவர் சம்பவங்களை நேரில் கண்ட சாட்சிகளில் ஒருவர். இவர் கூரியதாவது ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தனது உறவினர் ஒருவரின் நிறைமாத கர்பிணி பெண்ணின் வயிற்றை பிளந்தது அந்த சிசுவை கூரிய கத்தியால் குத்தி வயிற்றிலிருந்து வெளியே எடுத்தனர். பின்னர் எரிந்து கொண்டிருந்த தீயில் வீசியெறிந்தனர். அதைகண்டு ஆனந்தம் கொண்டு சிரித்தனர்.
பெஸ்ட் பேக்கரி வழக்கு:
ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வதோரா நகரில் பெஸ்ட் பேக்கரி என்ற கடையை தீவைத்து எரித்தனர். பெஸ்ட் பேக்கரி எரிப்பு ஒரு விசித்திரமானது. அந்த பேக்கரியை நடத்தி வந்த முஸ்லிம் ஒருவர் ஆர். எஸ். எஸ். காரர்களுடனும் அவர்களது ஏரியா தலைவர்களுடனும் நெருங்கிய நட்பு கொண்டிரிந்தவர். அதுமட்டுமல்லாது இவர்கள் நடத்தும் நிகழ்சிகளுக்கு நன்கொடைகளை அள்ளி வீசியவர். கலவரம் நடக்கும்போது அந்த பேக்கரியின் உரிமையாளர் அந்த பகுதியை விட்டு வெளியேற ஆயத்தம் ஆகுகிறார். அப்போது ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வந்து சொல்கிறார்கள் நீங்கள் போகவேண்டாம் உங்களுக்கு எந்தபிரச்சனையும் இல்லை நீங்கள் எங்கள் ஆள் என்று சொல்லி அவரையும் பேக்கரியில் வேலை செய்பவர்களையும் இருக்க சொல்லிவிட்டு இரவில் கூட்டமாக வந்து இவர்கள் 19 பேரை உள்ளே வைத்து பூட்டி உயிரோடு எரிந்து சாம்பலாக்கினர் துரோகிகள்.
இந்த கலவரத்தின் அனைத்து வழக்குகளிலும் சம்மந்த பட்ட முக்கிய குற்றவாளியான மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.யின் முக்கிய தலைவர்கள் திட்டமிட்டு தப்ப வைக்கப்பட்டுள்ளனர். பாபர் மசூதி வழக்கில், “இந்து என்பது மதமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை” என ஆர்.எஸ்.எஸ். இன் கொள்கையையே தீர்ப்பாக உயர்நீதிமன்றம் அளித்தது முதல் மோடி தப்புவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த பல தீர்ப்புகள் வரையில் நீதி துறை ஹிந்துதுவாவின் கைகளில் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது. அந்த கலவரங்களில் சம்மந்தப்பட்ட பெருவாரியான ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தப்பவைக்கப்பட்ட இந்நிலையில் ஒரு சம்பவத்திற்கு மட்டும் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது உண்மையில் பாராட்டுதலுக்கு உரியதே.
No comments:
Post a Comment