Sunday, November 20, 2011

ரதயாத்திரை இன்று தொடக்கம்!

பாபரி மஸ்ஜிதின் வரலாற்றை நினவுகூறும் வகையிலும் அதனை ஒரு போதும் விட்டுக்கொடுக்கும் எண்ணம் எந்த ஒரு முஸ்லிமிடமும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் ஒவ்வொருவருடமும் டிசம்பர் -6ஆம் தேதி அன்று நாடு முழுவதும் முஸ்லிம்கள் ஆர்பாட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.



அந்த வகையில் தமிழகத்தில் செயல்படுகின்ற சமுதாய இயக்கமான இந்திய தவ்ஹீத் ஜமாத் (ஐ.என்.டி.ஜே) ஒரு புதுவிதமான போராட்ட தளத்திற்கு அடித்தளமிட்டுள்ளது. 1992ஆம் ஆண்டு அத்வானி என்ற ஃபாசிஸ கொள்கை கொண்ட இந்துத்துவ வெறியனாக செயல்பட்டு ரதயாத்திரை நடத்தி கலவரத்தை மூட்டி பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை உயிரைக்குடித்து, முஸ்லிம்களின் புனித இல்லமான பாபரி மஸ்ஜிதை இடித்து தரை மட்டமாக்கினார்கள்.

பாபரி மஸ்ஜித் இடக்கப்படும் போதும் அதனை கண்டு வேடிக்கைபார்த்துக்கொண்டு அதை தடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்து விட்டு தன்னுடைய சுயசரிதையை எழுதும் போது பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாள் எனது மனதை மிகவும் பாதிப்புள்ளாக்கியது என்று பசுத்தோல் போர்த்திய புலியாக சிறுபான்மை மக்களை ஏமாற்றும் வேலையில் இறங்கினார் அத்வானி. எத்துனை ஆண்டுகள் கடந்தாயினும் ஒரு போதும் பாபரியை விட்டுக்கொடுக்க மாட்டோம். ஒரு முஸ்லிமின் உயிர் உடலை விட்டு பிரிவதற்கு முன் இன்னொரு முஸ்லிமிற்கு பாபரியின் வரலாற்றை கொண்டு சேர்த்துவிட்டுத்தான் மரணிப்பான்.

இந்த தயர சம்பவத்தை நினைவுகூறும் வகையில் ஐ.என்.டி.ஜே இந்த வருடம் இறையில்லத்தை மிட்பதற்காக ரதயாத்திரையை அறிவித்துள்ளது. தமிழகத்தில் மேலப்பாளையத்திலிருந்து தொடங்க இருக்கும் இந்த யாத்திரை டிசம்பர்-6 ஆம் தேதி அன்று சென்னையில் நிறைவடைய இருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சாரம் வெற்றியடையவேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக வாழ்த்தினை தெரிவிக்கிறோம்.

No comments:

Post a Comment